Saturday, February 11, 2012

புற்று அற்ற உலகம் செய்வோம்.!


புற்றுநோய் இன்று பலரை பாதிக்கிறது. சிகிச்சை முறைகள் வேகமாக வளர்ந்தாலும், அதை விட நோயும் துரிதமாக பலரை பாதிக்கிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வும், அதன் மருத்துவ முறைகளையும் அறிந்துகொள்ளுதல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். 

புற்றுநோய் மனித உடலில் உள்ள மரபணுக்களின் திடிர்மாற்றத்தால் தோன்றுகிறது. மரபணு என்று சொல்லுவதால் இது பாரம்பரிய நோய் அல்ல.நமது உடலில் உள்ள செல்கள் தோன்றி வளர்ந்து அழிய வேண்டும். இதற்கு p21  மற்றும் p53 என இரு ஜீன் காரணமாகின்றன. p21 செல்லின் வளர்ச்சியை தூண்டும். p53 இதன் வளர்ச்சியை நிறுத்தும். இந்த இரு ஜின்களிலும் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக இந்த செல்கள் கட்டுபாடின்றி பிரிந்து வளர்ந்து அருகில் உள்ள திசுகளுக்கும் பரவி புற்றுக்கு காரணமாகிறது. எனவே இது பரம்பரை நோய் அல்ல. மார்பக புற்று நோய் மட்டும் தாய்க்கு வந்தால் மிக சிறு அளவில் மகளுக்கு வர வாய்ப்புண்டு. சிறு அளவில் தான், ஆனால் சாத்தியம் இல்லை. எனவே மார்பக புற்று உள்ள தாயின் மகள் அதிக கவனத்துடன் தன்னை தானே பரிசோதித்துக்கொள்ள வேண்டும். புற்று நோய் செல்கள் உள்ள இடங்களை பாதிக்கும் என்பதால் இது உடலின் பல பகுதிகளை பாதிக்கும். எனவே புற்றுநோயில் பலவகைகள் உள்ளது. 
தோல் மற்றும் திசுக்களில் தோன்றுவது கார்சிநோமா, எலும்பு எலும்பு மஜ்ஜையில் ரத்த குழாயில்  வருவது சார்கோமா, ரத்த அணுக்களில் வருவது லுகுமியா, மூளை செல்களில் தோன்றுவது மாளின்கினன்ட்.

திடீர் மாற்றம் உருவாகும் வழிகள்: 
திடீர் மாற்றங்கள் இன்றைய காலகட்டத்தில் பலவகைகளில் நடக்கிறது. கதிர்வீச்சு அபாயம், நமது சில உணவு பழக்கங்களும் இதற்கு காரணமாகிறது. புகை பிடிக்கும் பழக்கம் மூலமும் இது ஏற்படுகிறது. புகைஇலையில் உள்ள நிகோடின் என்னும் பொருள் இத்தகைய திடீர் மாற்றங்களை தூண்டும் காரணியாக உள்ளன. இதனால் நேரடியாக புகைப்பவர் மட்டுமின்றி மறைமுகமாக அதை உள்ளிளுபவருக்கும் இந்த திடீர் மாற்றம் உருவாக சாத்தியம் உள்ளது. அதிக அளவில் ஜங் புட் சாப்பிடுவது,OCT மாத்திரைகள் சாப்பிடுவது(கருத்தடை செய்யும்), கதிவீச்சு வெளிஆகும் இடங்களில் இருப்பது போன்றவை ஆகும்.முன்பெல்லாம் 1000 பேரில் 10 பேருக்கு இந்நோய் வரும் வாய்ப்பு இருந்தது. இன்று அது நூறாக அதிகரித்து இருக்கிறது. நம் வாழ்க்கை முறைகள் மாறியதால் பெற்ற வரமிது. கதிர்வீச்சு அபாயங்களை நாம் இன்று நமக்கு தெரியாமலே நாம் சந்திக்கிறோம். uv கதிர்வீச்சு அதில் முக்கியம்.செல் போன்களில் இருந்தும்,அதன் கோபுரங்களில் இருந்தும் கதிர் வீச்சை நாம் பெறுவதாக நம்பபடுகிறது. முழுதாய் நிரூபிக்க படவில்லை என்றாலும் ஆழமாக நம்பபடும் விஷயம். ஆதாலால் இத்தகைய பொருட்களின் 
தேவையை குறைப்பது நல்லது.

புற்று தோற்றம் பற்றிய  ஆய்வுகள்:


டாக்டர் ஆர்வேர்லேண்டு என்பவர் உயிரணுக்கள் நச்சுத் தன்மை அடைவதே புற்று நோய் வருவதற்கான மூலக்காரணம் என்று முதலில் அறிவித்தார். இன்றைய மிகப்பல நல்ல ஆய்வாளர்களின் கருத்தும் அதுவே. பொதுவாக உடல் உழைப்பு மற்றும் உடல் இயக்கத்தின் போது உயிரணுக்கள் தேய்மானமுற்று அழிந்து விடுவதே இயல்பு. நாம் உண்ணும் உணவிலுள்ள உயிர்ச் சத்துக்கள் அதனை ஈடு செய்யப் பயன்படுகின்றன. பழுதடைந்த உயிரணுக்களைப் புதுப்பிக்கும் பொருட்டு உடலானது லேக்டிக் அமிலம் என்னும் புதுவித அமில சக்தியினை உற்பத்தி செய்யும். உடலுக்கு சாதகமான அதாவது உயிருள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வரும் வேளையில் பழுதடைந்த உயிரணுக்களைப் புதுப்பிக்க உடல் எடுக்கும் முயற்சியின் பங்கு குறைவாகவே இருக்கும். அதாவது குறைந்த அளவே லேக்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் உணவினைக் கெடுதலான வழி முறைகளில் தயாரித்து வேகவைத்து எண்ணெயில் வதக்கி சத்திழப்பு செய்து வாய்க்கு ருசியாக எடுத்துக் கொள்பவரின் உயிரணுக்கள் அதிகமான அளவு நச்சுத் தன்மையை அடைந்து விட ஏதுவாகிறது. அப்படிப்பட்ட நிலையில் உடலும் உயிரணுக்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் நச்சுத் தன்மையை ஈடு செய்ய வேண்டி லேக்டிக் அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றது. இப்படித் தேவைக்கு மேல் உற்பத்தியான அமிலநீர் உடலைவிட்டு வெளியேற்றப்பட இயலாத நிலையில் தகுதியில்லாத ஒரு தனி தசைப்படலமாக ஒன்று சேர்ந்துவிடும். அதைத்தான் நோய் கட்டி என்கிறோம்.அந்த கட்டியினுள் உருவாகி இருப்பது வளர்ச்சியடையாத, அதே வேளையில் இயல்புக்கு மாறாக கூட்டு மீறி பெருகும் குணம் கொண்ட இளம் உயிரணுக்கள், அதைத்தான் ‘கேன்சரஸ்’ செல்கள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். என்வே தான் உயிருள்ள உணவுகளை உண்டு உயிரோடு வாழுங்கள் என இயற்கை மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றார்கள். மருத்துவ நிலையங்களில் அவ்வித உணவுகளைத் தயாரித்தும் கொடுக்கின்றனர். பெரும்பாலும் சித்தா மருந்துகளில் உணவே மருந்தாக பயன்படுவது குறிப்பிட தக்கது.  

புற்றுநோயின் அறிகுறிகள்: 

வயிற்று புற்று இருந்தால்: உடல் எடை குறைதல், பசியின்மை, அஜீரணம் ஏற்படும்.

குடல் புற்று இருந்தால்: குடல் இறுக்கம், கட்டி, மூலம் போன்றவையும்

மார்பக புற்று: மார்பகத்தில் வலியற்ற கட்டி.

தோல் புற்றின் அறிகுறி: ஆறாத புண், மறுக்களின் நிறம் மாறுதல் 

சுவாச புற்றின் அறிகுறி: தொடர் இருமல், சளியில் ரத்தம், மார்பில் வலி

தொண்டை  புற்றின் அறிகுறி: விழுங்குவதில் சிரமம் மற்றும் வலி 

சிறுநீரக புற்றின் அறிகுறி: சிறுநீர் கழிக்கையில் ரத்தம் வெளியாவது மற்றும் எரிச்சல். 

மூளை புற்றின் அறிகுறி: தொடர்ந்த தலைவலி, வாந்தி, மயக்கம்,பார்வை இழப்பு.

புற்றுநோய் இருப்பதை கண்டறியும் சோதனைகள்: 

புற்றுநோய் இருப்பதை கண்டறியும் சோதனைகள் இன்று நவீனம் அடைந்துள்ளன. ரத்தம் பரிசோதனை, சீ.டி ஸ்கேன், மற்றும் என்டோஸ்கோபி மூலம் கண்டறியலாம். முன்பு பயன்படுத்தபட்ட மேமொக்ராம் பரிசோதனையில் நோயாளிக்கு அதிகமான வலி ஏற்பட்டது. தற்போதைய நவீன மேமொக்ராம் வலி இல்லாமல் பரிசோதனை செய்ய உதவுகிறது. தற்போது விஞ்ஞானிகள் நோயாளியின் மூச்சு காற்றிலிருந்து நோயை உணரும் ஒரு கருவியை உருவாக்கி இருப்பது இத்துறையின் வரப்பிரசாதம்.

இந்நோயினை தடுப்பது கடினம். ஆனால் குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் வேகமாக வளருகின்றன. கீமோதெரப்பி, ரேடியோதேரப்பி, அறுவை சிகிச்சை முறைகளோடு ஸ்டெம் செல் சிகிச்சை முறையும் ஆய்வில் உள்ளது. ஸ்டெம் செல் என்பது நம் உடலில் உள்ள ஆதார செல்கள். இச்செல்களை கொண்டு உடலின் எந்த ஒரு பாதிக்கபட்ட உறுப்பையும் புதிதாக உருவாக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது. இச்செல்களை கொண்டு புற்று பாதிக்கப்பட்ட செல்களை நீக்கிவிட்டு புதிதான செல்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருப்பது இத்துறையில் நம்பிக்கை தரும் ஒரு விஷயம். இன்னும் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. dca  என்னும் அந்த மருந்து புற்று செல்களை தாக்கி அழிப்பதில் நம்பிக்கை தருகிறது. ஆராய்ச்சி அளவில் உள்ள இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.  மற்றும் ஒரு பெரிய நம்பிக்கை, மனித மரபணுக்களை படிக்கும் Human genome ப்ராஜெக்ட் இதில் மரபணுக்களின் கட்டமைப்பை விஞ்ஞானிகள் படிக்கின்றனர்.இதன் மூலம் தவறான கட்டமைப்பு உள்ள மரபணு சில நோய்களுக்கு காரனமாவதாக அவர்கள் சொல்கின்றனர். இதை முழுதாக அறிவதன் மூலம் புற்றுக்கு காரணமான மரபணுவின் கட்டமைப்பை அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் ஒருவருக்கு புற்று வர சாத்தியம் உள்ளதா என்பதை அவரின் மரபணு கட்டமைப்பை தெரிந்து கொள்வதின் மூலம், நோய் வரும் முன்னரே அறிய முடியும். இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை அல்லது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது ஒரு நம்பிக்கை செய்தி.
 நம் உணவு பழக்கங்களின் மூலம் சில புற்றை கட்டுபடுத்தலாம்.
 1.பாகற்காய் சாறு மார்பக புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து அவற்றை அழிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பது இனிப்பான செய்தி. 
2.இதே போல் குங்குமபூ கல்லீரல் புற்றுக்கும் ப்ரிக்க்லி கஸ்டர்ட் ஆப்பிள் என்னும் பழம் எல்லாவகை புற்றையும் குணப்பட்த்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. 
3.இது தவிர காரட், பப்பாளி, காலிபிளவர்,பூண்டு, தக்காளி போன்றவையும் புற்றை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
4. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களே புற்று சிகிச்சையை எளிதாக்கும். மீன்களில் உள்ள ஒமேகா மூன்று என்னும் அமிலத்தில் இருந்து பெறப்படும் டெல்டா 12 என்னும் வேதிப்பொருள் புற்றுசெல்களை தாக்கி அழிக்கின்றன. 


புற்றை தவிர்க்கும் வழிகள்:
நல்ல ஆரோக்ய உணவுகளை உண்ணுதல், ஜங் புட் தவிர்த்தல், வைட்டமின், ப்ளேவ நாய்டு உள்ள உணவுகளை உண்ணுதல், நம் பாரம்பரிய உணவுகளை கடைப்பிடித்தல், மூச்சு பிசி செய்தல், உள்வாங்கும் மூச்சு நுரையிரல் முழுமையும்  அடையுமாறு பயிற்சி செய்தல், யோகா பயிற்சி மூலமாகவும் நம்மை காத்து கொள்ளலாம். கூடிய வரை இயற்கையான உரங்களின் மூலம் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பயன்படுத்துதல் அவசியம். சில வகை வேதி உரங்கள் திடீர்  மாற்றத்தை தூண்டும்.
புற்றுஉள்ளவர்களுக்கு மிக முக்கிய தேவை நம்பிக்கையும் ஆறுதலும் தான். புற்றுநோயினால் பாதிக்க பட்டவர்கள் நம்பிக்கை இழப்பது தான் முதல் தோல்வி ஆகிறது. எனவே அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க அவர்களுக்கு நம்பிக்கையும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது மிக அவசியம்.
 ஒரு சில புற்றை தவிர பெரும்பாலானவற்றுக்கு மருந்துகளும் சிகிச்சையும் உள்ளதால் பாதிபுள்ளவர்களுக்கு நம்பிக்கையை முதல் மருந்தாக அளித்து புற்றை வெல்வோம்.

விழிப்புணர்வோடு இருப்போம்!   புற்றிலா உலகம் படைப்போம்!!